தொடரும் பரம்பரை அரசியல் – நாடாளுமன்றத்தில் 130 எம்.பிக்கள் அரசியல் வாரிசுகள்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பதவியேற்ற எம்.பிக்களில் 130 பேர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.அரசியலை பின்புலமாக கொண்டவர்களின் வாரிசுகள் ஆவர்.

நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடந்து முடிந்து புதிய எம்.பிக்கள் கடந்த வாரம் பதவி ஏற்றனர். தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்துமதிப்பு, குற்ற பின்னணி போன்றவை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் சட்ட விதியாக உள்ளது.

அரசியல் வாரிசுகள்:

அரசியல் வாரிசுகள்:

இதேபோல் புதிய எம்.பிக்களின் குடும்ப பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தமுள்ள 540 எம்.பி.க்களில் 130 பேர் அரசியல் வாரிசுகள் என தெரியவந்துள்ளது.

குடும்ப எம்.பிக்கள்:

குடும்ப எம்.பிக்கள்:

இதில் 69 பேர் தற்போதைய எம்.பி அல்லது எம்.எல். ஏக்களின் மகன்கள் ஆவார்கள். 11 பேர் மகள்கள். 10 பேர் மனைவிகள். 10 பேர் சகோதரர்கள். மற்றவர்கள் உறவினர்களாக உள்ளனர்.

ஆந்திராவில் அதிகம்:

ஆந்திராவில் அதிகம்:

மாநில வாரியாக ஆய்வு செய்ததில் ஒருங்கிணைந்த ஆந்திராவில்தான் அதிக வாரிசுகள் உள்ளனர்.

கட்சியில் சமாஜ்வாடி முதலிடம்:

கட்சியில் சமாஜ்வாடி முதலிடம்:

கட்சி வாரியாக கணக்கிட்டதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் 100 சதவீத குடும்ப பின்னணி கொண்டு முதல் இடத்தில் உள்ளது.

அதிமுகவில் குறைவு:

அதிமுகவில் குறைவு:

அடுத்த இடத்தில் தெலுங்குதேசம் உள்ளது. 3 ஆவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும், பிஜு ஜனதா தளமும் உள்ளது. அ.தி.மு.கவில்தான் குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வாரிசுகள் கொண்ட எம்.பிக்கள் உள்ளனர்.

பரம்பரை அரசியல்:

பரம்பரை அரசியல்:

இந்த ஆய்வு பரம்பரை அரசியல் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.அரசியல்வாதிகளின் வாரிசு அரசியலும் நீர்த்துப் போகவில்லை என்பது தெரிய வருகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+