For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தது வசந்தம் தரும் ஹோலி – கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டவரும், கடவுளின் குழந்தைகளும்!

Google Oneindia Tamil News

ஆக்ரா: இந்தியாவில் வசந்தப் பெருவிழாவினை வரவேற்கும் வண்ணமிகு பண்டிகையான ஹோலி கொண்டாட்டத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு வண்ணம் பூசி மகிழ்ந்தனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளும் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் நேற்றே ஹோலி கொண்டாட்டங்கள் வட இந்தியாவில் களை கட்டி விட்டன.

கொண்டாட்ட ஹோலி:

கொண்டாட்ட ஹோலி:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்ற மக்கள் வண்ணப் பொடிகளைத் தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சியடித்தும் ஹோலியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஹோலியை வரவேற்கும் வெளிநாட்டவர்:

ஹோலியை வரவேற்கும் வெளிநாட்டவர்:

இந்தக் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயமணிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நடந்த ஹோலி கொண்டாட்டங்களில் வளிநாட்டு சுற்றுலாப் பயமிகளும் கலந்து கொண்டனர்.

அறுவடைத் திருநாள்:

அறுவடைத் திருநாள்:

ஹோலி நாள் அன்று அதிகாலை முதலே வாளி வாளியாக வண்ண வண்ண கலவைநீர் தயாரிக்கப்பட்டு, அதைப் பீச்சாங் குழல் மூலம் உறவினர், நண்பர்கள் மீது பீய்ச்சியடித்தும், வண்ணப்பொடிகளைத் தூவியும் வாழ்த்து தெரிவிப்பர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வது வழக்கத்தில் உள்ளது. வட இந்திய மாநிலங்களில் அறுவடைத் திருநாளே ஹோலி.

காஷ்மீர் முதல் குமரி வரை:

காஷ்மீர் முதல் குமரி வரை:

சமூக, மொழி பாகுபாடின்றி இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் முதல் கன்னியாகுமரி வரை ஹோலி கொண்டாட்டத்தை சமீப காலமாக பார்க்க முடிகிறது.

மதுராவில் கோலகலம்:

மதுராவில் கோலகலம்:

இருப்பினும் இன்னும் இது வட இந்தியாவில்தான் மிகப் பிரபலமாக உள்ளது. மதுரா,விருந்தாவன் ஆகிய நகரங்களில் நேற்று ஹோலி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பூதகி அழிந்த தினம்:

பூதகி அழிந்த தினம்:

பவிஷ்ய புராணத்தின்படி மக்களுக்குத் தொல்லை தந்து வந்த துந்தா என்னும் பெண் அரக்கியை அழித்திட பங்குனி மாதத்தில் தாந்திரீகச் சடங்கு ஒன்றை நடத்தி அவளை அழித்தனர். அவள் அழிந்த தினமே ஹோலி.

கடவுளின் குழந்தைகளின் கொண்டாட்டம்:

கடவுளின் குழந்தைகளின் கொண்டாட்டம்:

இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஹோலிப்பண்டிகையை சிறப்பு அறிவு கொண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

English summary
As the spirit of Holi takes over India, foreign tourists visiting the country joined in the celebrations. Though Holi falls on March 06, festivities have already begun across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X