For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்விச்சாலையைத் தந்த ஏழைத்தலைவன்... கர்மவீரர் காமராஜரின் 40வது நினைவு தினம்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் தமிழக முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜரின் 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்குக் கல்விக் கண்ணைத் திறந்த, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற, நாட்டு நலனை மட்டுமே தனது இறுதி மூச்சு உள்ளவரை சிந்தித்து செயல்பட்ட ஒரு மாபெரும் தலைவர் காமராஜர்.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தவேண்டும் என்பதை 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டுவரை தமிழக முதல்வராய் 9 ஆண்டு காலம் பதவியில் இருந்து பறைசாற்றியவர் காமராஜர்.

காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பை வகித்ததோடு, புகழ்பெற்ற தலைவராகவும் விளங்கினார் காமராஜர். அவரது 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், கோபண்ணா, தணிகாசலம், செல்வம், மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், ராயபுரம் மனோ, கவுன்சிலர் தமிழ்செல்வன், தி.நகர் ஸ்ரீராம், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.வினர் ஜி.கே.வாசன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

English summary
Kamaraj was the chief minister of Tamil Nadu during 1954–1963. He was known for his simplicity and integrity. His 40th death anniversary commemorated today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X