சொல்லியடித்த மம்தா... மேற்குவங்க இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் உற்று நோக்கப்பட்டன.

மேற்கு வங்க அரசியல்
அதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அரங்கேறிய அண்மைகால அரசியல் நிகழ்வுகள். மேற்குவங்க ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல், மேற்கு வங்க அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களில் ஏற்பட்ட குற்றச்செயல்களால் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை மாநில மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அசான்சோல் மக்களவைத் தொகுதி
இதில், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த பாஜகவை சேர்ந்த பாடகர் பபுல் சுப்ரியோ கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து அசான்சோல் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சத்ருகன் சின்ஹா
இதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த அக்னிமித்ரா பால் போட்டியிட்டார்.

பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி
அதேபோல், மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து அவரது பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகலிருந்து விலகிய பபுல் சுப்ரியோவை வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது.

இரண்டிலும் திரிணாமூல் வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அசான்சோல் மக்களவைத் தொகுதியில் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றிபெற்றார்.
அதேபோல் பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபுல் சுப்ரியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிமைவிட 20,030 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு!












Click it and Unblock the Notifications