For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் யாரும் துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டாம்: சுஸ்மா சுவராஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ள நிலையில், நிலைமை கட்டுக்குள் வரும் வரை யாரும் துருக்கி செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் வாழும் இந்தியர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Turkey coup attempt: Sushma calls upon all sides in Turkey to avoid bloodshed

துருக்கியில் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், 336 பேர் இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் புரட்சிக்கு காரணமான ராணுவ தளபதி கொல்லப்பட்டதகால் தற்காலிக தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் ராணுவம் ஆட்சியைக் கைப்ற்றிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆங்காராவில் உள்ள அரசு மாளிகை தற்போது ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே துருக்கியில் இந்தியர்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்கவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வீரர் விராங்கனைகள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் துருக்கியில் இந்தியர்கள் துதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

அங்காராவில் வாழும் இந்தியர்கள் +905303142203 என்ற தொலைபேசி எண்ணையும், இஸ்தான்புல் நகரில் வாழும் இந்தியர்கள் 905305671095 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு உதவி கோருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Susma Swaraj asked Indians to avoid public places and remain indoors until the situation becomes clearer in the backdrop of the attempted military coup.

60 words

துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ள நிலையில், நிலைமை கட்டுக்குள் வரும் வரை யாரும் துருக்கி செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் வாழும் இந்தியர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Susma Swaraj asked Indians to avoid public places and remain indoors until the situation becomes clearer in the backdrop of the attempted military coup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X