இது என் மனைவி... ஒரு பெண்ணைக் காட்டி அடித்துக் கொண்ட 2 ஆண்கள்... குழம்பிப் போன போலீசார்!
ராஞ்சி: ஜார்கண்டில் ஒரு பெண்ணிற்கு, இரண்டு ஆண்கள் சொந்தம் கொண்டாடியதால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சம்பவத்தன்று பிங்கி தேவி என்ற பெண்ணும், அவரது கணவர் லால்டு போஸ் என்பவரும், சுனில் சாவ் என்பவரை அழைத்துக் கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசாரிடம் பிங்கி அளித்த புகாரில், சுனில் தன்னை மனைவி என ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக சுனிலிடம் போலீசார் விசாரித்தபோது, 'பிங்கி தன்னுடைய மனைவி தான் என்றும், இருவருக்கும் குழந்தை இருப்பதாகவும், தனக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்ட பின்னர் தன்னை விட்டு பிரிந்துவிட்டதாகவும்' கூறினார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பிங்கி, ‘ரேஷன் கார்டு வாங்குவதற்காக சுனில் தன்னுடைய பெயரை மனைவி என பயன்படுத்தியாகவும், ஆனால், அதனைத் தொடர்ந்து ஊர் முழுவதும் தன்னை மனைவி என அவர் அறிமுகப்படுத்தி தொந்தரவு தந்து வருவதாகவும்' குற்றம் சாட்டினார்.
ஆனால், பிங்கியின் குற்றச்சாட்டை மறுத்த சுனில், ஏற்கனவே பிங்கிக்கு இரண்டு கணவர்கள் இருப்பதாகவும், லால்டு அவரது மூன்றாவது கணவர் என்றும் வாதிட்டார்.
இவ்வாறு காவல் நிலையத்தில் வைத்து பிங்கி என் மனைவி தான் என லால்டுவும், சுனிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டு குழம்பிப் போன போலீசார், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இருதரப்பிற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
இதில் முறைப்படி தாலி கட்டிய முதல் கணவர் யார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கியுள்ளனராம்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications