பிட்காயின் பிட்காயின்னு ஒன்னுமில்லாததற்கு அலையாதீர்... மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிட்காயின்களில் முதலீடு செய்து வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை அளித்துள்ளது.

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். ஆனால் இவற்றை நாம் இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று ஆயிரத்துக்கும் அதிகமான கரன்சிகள் உள்ளன.

Union Finance Ministry cautions about the Bitcoin consumers

இந்தியாவில் ஒரு பிட்காயினின் ரூ.12 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிட்காயினை பணம் கொடுத்தும் பங்குகளை விற்றும் வாங்கிக் கொள்ளலாம். தங்கத்துக்கு மாற்றாக இதை வாங்கிக் கொள்ளலாம். இதற்கென வரி விதிப்பு முறையோ வங்கி கட்டுப்பாடுகளோ கிடையாது. அதனால் இதை அனைவரும் வாங்கி வருகின்றனர்.

கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிட்காயின்களை வைத்திருந்தவர்கள் கோடீஸ்வரர் ஆனர். கடந்த முறை பணமதிப்பிழப்பின்போது பிட்காயின்களை வாங்கியுள்ளனரா என்று மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசோ இந்தியாவில் உள்ள எந்த ஒழுங்குமுறை அமைப்போ இந்த பிட்காயிகள் ஏஜென்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

எனவே இதில் முதலீடு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை காயின்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டாலும் இவை சட்டரீதியில் செல்லும் காயின்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Finance Ministry on Friday said, “The government or any other regulator in India has not given license to any agency for working as exchange or any other kind of intermediary for any virtual currency.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X