For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செஸ் அதிர்ச்சி.. இந்தியாவில் 6.68 லட்சம் குடும்பங்கள் பிச்சை எடுக்கின்றன! ஜாதி கணக்கு மறைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும்பத்தினர் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 1872 முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்புடன் சாதி வாரியான விவரங்களையும் திரட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எதிர்க் கட்சிகள் முன் வைக்கப்பட்டது. இந்தியாவில் 1931ம் ஆண்டு வரை சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு நிறுத்தப்பட்டு விட்டது.

Union government doesn't record caste-based data

கடந்த 2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பாக இது அமைந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. ஆனால் சாதி சார்ந்த விவரங்களை வெளியிடுவதை அரசு தவிர்த்து விட்டது.

சாதிவாரியான கணக்கெடுப்பு

கடந்த 1931ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிடப்பட்டனர். ஆனால் சாதி சார்ந்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

640 மாவட்டங்கள்

இதில் இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங்களில் வசித்து வரும் குடும்பங்களில், கடந்த 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

பின்தங்கிய மக்கள்

இந்த கணக்கெடுப்பு படி, இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும்பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.

Union government doesn't record caste-based data

குறைந்த வருவாய்

கிராமப்புறங்களில் வாழ்வோரில் கணிசமான குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி 7.05 கோடி (39.39 சதவீதம்) குடும்பத்தினர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் பெறாதவர்கள் ஆவர். இவர்களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.

நிலமற்ற ஏழைகள்

கிராமப்புற குடும்பத்தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வருகின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடியினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.

6.68 லட்சம் பேர் பிச்சைக்காரர்கள்

30.10 சதவீத கிராமப்புற குடும்பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியாளர்களாகவும் இருக்கின்றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

வருமான வரி

தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர். ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினர் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.

அருண் ஜெட்லி

மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, "1932-க்குப் பிறகு சாதிவாரியான தரவுகளைத் திரட்டியிருக்கிறோம். இது மிக முக்கியமான ஆவணம். மத்திய மற்றும் மாநிலங்களில் இருக்கும் அரசுகளுக்கு கொள்கைகளை வகுப்பதற்கு இது முக்கியமாக தேவைப்படும். திட்டங்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்" என்றார்.

முக்கியமான ஆவணம்

இந்தியாவின் உண்மை நிலையை இந்த ஆவணங்கள் எதிரொலிக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும்' என்று கூறினார். இந்த ஆவணத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உயர்மட்டக்குழுக்கள் ஆலோசனை நடத்தியதாக கூறிய அவர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு குடும்பங்கள் தொடர்பான தெளிவான நிலையை அரசுக்கு இந்த அறிக்கை வழங்கி உள்ளதாக கூறினார்.

சாதிவாரியான விபரங்கள்

சாதிவாரியாக மக்கள்தொகை விவரங்கள் வெளியிடப்படாதது குறித்து செய்தியாளர்கள், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங்கிடம் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "சாதி வாரி விவரங்கள் இதில் இல்லை. ஆனால், அதனை தேர்தலோடு தொடர்புபடுத்திக் கூறுவது தவறு என்றார்.

தலைவரின் முடிவு

மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தலைவரின் முடிவு இது. அவர் மட்டுமே இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறிய அமைச்சர், பொருளாதார தரவுகளில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அப்போதுதான், நமது திட்டங்கள் யாருக்குத் தேவை என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Government on Friday refrained from releasing the caste-based data in its first Socio Economic and Caste Census (SECC) released in eight decades and maintained that it was concerned with economic data which will help in effective implementation of its programmes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X