For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சரவை கூட்டங்களில் இனி செல்போன் பயன்படுத்த தடை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சீனா அல்லது பாகிஸ்தான் உளவுத்துறைகளால், நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அமைச்சகங்களில் உள்ள மின்னணு உபகரணங்கள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

Union Ministers asked not to carry mobile phones during Cabinet meetings

நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களில் இருந்து முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள், வெளியே கசியாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா அல்லது பாகிஸ்தான் உளவுத்துறைகளால், மத்திய அமைச்சகங்களில் உள்ள மின்னணு உபகரணங்கள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இனி ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு கூட அரசு கணினிகளில் செல்போன்களை இணைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர்கள் தங்களது செல்போனை சுவிட்ஜ் ஆப், சைலண்ட் மோடில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

English summary
In a move aimed at checking any possibility of leakage of information through hacking of communication devices, Union Ministers have been asked not to carry mobile phones in Cabinet meetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X