For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு காணாத வெற்றி.. 324 தொகுதிகளை கைப்பற்றி உ.பி.யில் ஆட்சியை பிடித்தது பாஜக!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. மத்திய மோடி அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்பட்டதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் இம்மாநிலத்தில் மொத்தமுள்ள சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 403. ஆட்சியை பிடிக்க இதில் பாதிக்கும் மேல், அதாவது 202 சட்டசபை தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இமாலய இலக்கு கட்சிகளுக்கு முன்பு இருந்தது. ஒரு மினி இந்தியாவாக காட்சியளிக்கும் உ.பியில் வெற்றி பெறும் கட்சி இந்தியாவின் நாடித்துடிப்பை பிரதிபலிக்கிறது என சொல்ல இதுதான் காரணம்.

UP assembly election result 2017: What BJP winning means for Modi's India

பணமதிப்பிழப்பு, வெளிநாட்டு கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தீவிரவாத ஒழிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விவகாரங்களில் மோடி அரசின் செயல்பாட்டை கணிக்க உள்ள தேர்தலாக இது அமையும் என்பதால் இம்மாநில தேர்தல் முடிவு மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதனிடையே காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை இங்கு தொடங்கியது. 9 மணிக்கெல்லாம் பாஜக நன்கு லீடிங் பெற்றது. இதனால் மோடி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி, பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பிறகும் வெற்றி வாய்ப்பு கொஞ்சமும் குறையவில்லை பாஜகவுக்கு.

மதியம் 2.30 மணி நிலவரப்படி, 195 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மேலும், 121 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றிருந்தது. மதியம் 3.30 மணி நிலவரப்படி, பாஜக பெரும்பான்மை தொகுதிகளை தாண்டியது. 284 தொகுதிகளை பாஜக வென்றிருந்ததோடு, 37 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றிருந்தது.

மாலையில் முழு ரிசல்ட் வெளியானது. மொத்தம் 324 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்று அசத்தியது. கடந்த தேர்தலை ஒப்பிட்டால் இது 277 தொகுதிகள் அதிகமாகும். இதில் இரு குட்டி கூட்டணி கட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், பாஜக மட்டும் 311 தொகுதிகளை வென்றுள்ளது.

சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிறர் 5 தொகுதிகளை கைப்பற்றினர்.

60 sec மினி இந்தியாவாக காட்சியளிக்கும் உ.பியில் வெற்றி பெறும் கட்சி இந்தியாவின் நாடித்துடிப்பை பிரதிபலிக்கிறது என அரசியல் விமர்சனர்கள் கூறி வந்த நிலையில் அங்கு பாஜக கூட்டணி 324 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.

English summary
Prime Minister Narendra Modi’s ability to pursue tough economic reforms and see opposition parties forge new alliances at the national level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X