For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதித்யநாத் முதல் ராஜ்நாத்சிங்வரை அலசுகிறது பாஜக.. அடுத்த உ.பி முதல்வர் யார்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சி யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் பாஜக போட்டியிட்டது நினைவிருக்கலாம். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் இப்படி ஒரு முடிவை எடுத்து தேர்தலை சந்தித்தனர். அதாவது, மோடியை முன்னிருத்தியே இத்தேர்தலும் சந்திக்கப்பட்டது.

எனவே ரிசல்ட் பாஜகவுக்கு சாதகமாக வந்தால், மோடியாலேயே வெற்றி என கூறிக்கொள்ள அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் நடந்துவிட்டது.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்ற யோகி ஆதித்யாநாத், பாஜகவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா மறைமுகமாக கூறி வந்தார். இதனால் அவரை முதல்வராக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.

கேசவ் மவுரியா

கேசவ் மவுரியா

அதேபோல, மேனகா காந்தியின் மகனும், எம்.பியுமான வருண்காந்தியை முதல்வராக்க பாஜகவில் ஒரு பிரிவினர் முயன்று வருகிறார்கள்.அதேபோல கேசவ் மவுரியா பெயரும் முன்னிலை வகிக்கிறது. உ.பியில். உ.பியில், யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் உயர் ஜாதி பிரிவினரை இணைக்கும் முயற்சியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவை சேர்ந்த கேசவ் மவுரியாவுக்கு சான்ஸ் அதிகம். இவர் உ.பி மாநில பாஜக தலைவராகவும் உள்ளார்.

சந்தோஷ் கங்வார்

சந்தோஷ் கங்வார்

இந்த போட்டியில் இருக்கும் மற்றொருவர் சந்தோஷ் கங்வார். 1989ம் ஆண்டு முதல் எம்.பியாக உள்ளவர். 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தவர். தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ளார். குர்மி எனப்படும் ஜாதி பிரிவை சேர்ந்தவர்.

மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா

மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா

உயர் ஜாதி பிரிவை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என பாஜக நினைத்தால் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா அவர்கள் சாய்சாக இருக்ககூடும். சங் பரிவார் அமைப்புகளுடன் மகேஷ் ஷர்மாவுக்கு நெருங்கிய பழக்கம் இருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் தேவையில்லாமல் அவ்வப்போது வாய் விட்டு சர்ச்சைகளில் சிக்குபவர் என்பதால் இவருக்கு சான்ஸ் குறைவு.

ராஜ்நாத்சிங்

ராஜ்நாத்சிங்

மற்றொரு முக்கியமான சாய்ஸ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். ஏற்கனவே முதல்வராக இருந்து அனுபவம் கொண்ட இவரோ, தான் டெல்லியைவிட்டு கிளம்ப போவதில்லை என கூறிவருகிறார். எனவே அவரது விருப்பத்திற்கு மாறாக முதல்வராக பாஜக முன்னிருத்துமா என்பது சந்தேகம். காஜிபூர் எம்.பி. மனோஜ் சின்கா, மத்திய அமைச்சர் உமா பாரதி, கல்ராஜ் மிஷ்ரா ஆகியோரும் சிஎம் ரேசில் உள்ளனர்.

English summary
Keshav Maurya is in the hot seat and is a frontrunner to the coveted post of UP chief minister. The reason why Maurya's name has cropped up is because the BJP worked on the non-Yadav OBC and upper caste mobilisation to rope in thevotes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X