For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுபிஎஸ்சி தேர்வுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: யு.பி.எஸ்.சி. தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மத்திய அரசு பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வுகளை நாளை நடத்துகிறது.

இதில் சி- சாட் என்ற திறன் அறிதல் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர். நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆங்கில மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. 9 லட்சம் தேர்வர்கள் எழுத தயாராக உள்ள நிலையில் தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டப்படி நாளை தேர்வு நடைபெறும்.

English summary
In a major setback for thousands of aspirants across the nation, the Supreme Court on Saturday rejected a petition seeking stay on the Union Public Services Commission preliminary examination, scheduled on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X