For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரமாண்டம்! அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கு பாருங்க.. முதல்முறை டாப்ஆங்கிளில் ரிலீசான படங்கள்

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு ராமர் கோவில் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. 2024 தொடக்கத்தில் கோவில் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பான ‛டாப் ஆங்கிள்' படங்கள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் ராமர் கோவில் கட்டுமான பணிக்குரிய அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அக்னிபாத் போராட்டம்: சாட்டையை சுழற்றிய உபி போலீஸ்! 260 பேர் கைது! அயோத்தியில் 144 தடைஅக்னிபாத் போராட்டம்: சாட்டையை சுழற்றிய உபி போலீஸ்! 260 பேர் கைது! அயோத்தியில் 144 தடை

துவங்கிய கட்டுமான பணி

துவங்கிய கட்டுமான பணி

இந்த அறக்கட்டளை கோவில் கட்டுமான பணியை முன்னெடுத்தது. கோவிலுக்கான கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதன்படி 110 ஏக்கரில் பிரமாண்டமாக கோவில் அமைக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. கோவில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக பிரமிக்கும் வகையில் கோவில் கட்டும் பணிகள் துவங்கி உள்ளது. இந்த கோவில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 2020 ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

கோவில் பீடம் அமைக்கும் பணி

கோவில் பீடம் அமைக்கும் பணி

இதையடுத்து கோவிலின் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்றது. 2022 பிப்ரவரியில் கிரானைட் கற்களால் பீடம் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பீடத்தில் மொத்தம் 17 ஆயிரம் கற்கள் இடம்பெற உள்ளன. இந்த பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தான் சமீபத்தில் கர்ப்பகிரஹ பணியை சமீபத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். 2023ம் ஆண்டுக்குள் கர்ப்பகிரஹ பணி முடிக்கப்பட உள்ளது. 2024ல் கோவிலின் முழு பணிகள் முடிக்கப்பட்டு தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் பணிகள் 3 நிலைகளில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

 வெளியான படங்கள்

வெளியான படங்கள்

இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் பீடம் கட்டும் பணி 6.5 மீட்டர் உயரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் தொடர்பான படங்கள் வெளியாகி உள்ளன. ஏரியல் வியூவில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மிகவும் கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்களை பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருவதை இந்த படம் தெளிவாக விளக்குகிறது.

கிரானைட்-இளஞ்சிவப்பு கற்கள்

கிரானைட்-இளஞ்சிவப்பு கற்கள்

தற்போது கோவில் கட்ட பயன்படுத்தப்படும் கிரானைட் கற்கள் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன இந்த கற்கள் 5 அடி நீளம் 3.5 அடி அகலத்துடன் 3 அடி உயரத்தில் உள்ளது. இந்த அளவிலான 17000 கற்களை கொண்டு கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூர் பகுதி மலைகளில் இருந்து கிடைக்கம் இளஞ்சிவப்பு மணற்கற்களும் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு ராஜஸ்தான் மாநிலத்தின் மக்ரானா மலைகளில் இருந்து கிடைக்கும் வெள்ளை பளிங்கு கற்கள் கோவிலின் கர்ப்பகிரஹத்துக்குள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டுமான பணி விபரம்

கட்டுமான பணி விபரம்

110 ஏக்கரில் அமைய உள்ள இந்த ராமர் கோவில் வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், காப்பக மையம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது. இந்த கட்டுமான பணியை லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர டாடா கன்சல்டிங் இன்ஜினியர்கள் திட்ட மேலாண்மை ஆலோசகர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர ஜெகதீஷ் அபாலே (ஐஐடி-மும்பை), கிரிஷ் சஹஸ்த்ரபுஜானி (ஐஐடி-மும்பை) ), ஜெகநாத்ஜி (அவுரங்காபாத்), மற்றும் அவினாஷ் சங்கம்நேர்கர் (நாக்பூர்) உள்ளிட்ட நான்கு பொறியாளர்கள் தன்னார்வலர்களாக கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The construction of the newly constructed Ram temple in Ayodhya is progressing rapidly. At the beginning of 2024, it is said that the temple will be opened and people will be allowed to have darshan. Ahead of the inauguration of the Ram Mandir aerial pictures of the structure releases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X