பக்கோடா, சிப்ஸ், கூல்டிரிங்ஸ் வாங்க 68 லட்சம்.. அரசு பணத்தில் உத்தரகான்ட் முதல்வர் அட்ராசிட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டேராடூன்: இந்தியா முழுக்க இப்போது பக்கோடா வைரல் ஆகி இருக்கிறது. நாட்டில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் பக்கோடாவுடன் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்கள்.

தற்போது உத்தரகான்ட் முதல்வர் நொறுக்கு தீனி வாங்க மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்தது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த தகவலை பெற்று இருக்கிறார்.

பாஜக கட்சியை சேர்ந்த முதல்வரின் இந்த செயல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதையும் பக்கோடாவோடு சேர்த்து வைத்து கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

பாஜக ஆளும் உத்தரகான்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஜனவரி 22ல் இருந்து இவ்வளவு பணம் செலவு செய்து இருக்கிறார். 10 மாதத்தில் மட்டும் நொறுக்குத்தீனி வாங்க 68,59,865 செலவு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பக்கத்து பக்கத்து ஊர்

பக்கத்து பக்கத்து ஊர்

இதில் அதிகமான பணம் விருந்தினர்களை உபசரிக்க வாங்கிய தீனிகளுக்கு செலவாகி இருக்கிறது. இதுபோல் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் நடந்துள்ளது. யோகி பதவியேற்றத்தில் இருந்து இதற்கு அதிக தொகை அங்கு செலவாகி இருக்கிறது.

பக்கோடா

இவர் ''இவ்வளவு பணம் செலவு செய்து இருக்கிறார்களா? இப்போது தெரிகிறது பாஜக ஏன் டீ, பக்கோடா மீது இவ்வளவு கண்ணாக இருக்கிறது என்று'' என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்

இவர் ''இவ்வளவு செலவா? பக்கோடா கடைகளை பிரபலப்படுத்த அரசு செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக் இது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Uttarakhand CM office spends 68 lakh on refreshments and snacks for guests. CM Trivendra Singh Rawat office has been spent Rs 68,59,865 of govt fund on refreshments.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற