துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல்.. பாஜகவிலிருந்து விலகினார் வெங்கையா நாயுடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவில் இருந்து வெங்கையா நாயுடு விலகியுள்ளார்.

குடியரசு தலைவர் அல்லது துணை குடியரசு தலைவர் போன்ற உயர் பதவி வகிக்க கட்சி பொறுப்புகளை துறக்க வேண்டும் என்பதால், வெங்கையா நாயுடு பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

Venkaiah Naidu relieves from BJP

துணை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் சாதாரண தொண்டனாக அரசியல் வாழ்கையை ஆரம்பித்து, எம்எல்ஏ, எம்பி, கட்சி தலைவர், அமைச்சர் என 4 தசாப்தங்களாக பல்வேறு பொறுப்புக்களையும் வகித்து வருகிறேன். துணை ஜனாதிபதி பொறுப்பு என்பது வேறு மாதிரியான பணி. அதிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

துணை ஜனாதிபதியாக என்னை நியமித்ததால் பெருமையடைகிறேன் என்றார் வெங்கையா நாயுடு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Office of Vice President is a different profile, has its functional norms. Hope I will be able to do justice. Grateful to PM, says Venkaiah Naidu
Please Wait while comments are loading...