இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.
டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையலகத்தில் வசித்து வந்தார் 92 வயதாகும் பரதன். கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி காலை 8 மணியளவில் பரதன் சுயநினைவிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலளர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரதன். 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர். 1990களில் இ. கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச்செயலரான பின்னர் தேசிய அரசியலில் தீவிர பங்காற்றினர். 1996ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பரதன்.
முதுமையினால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வசித்து வந்தார் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications