ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் விவேக் ஓபராய் அளித்த பரிசு என்ன தெரியுமா?
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்துக்கு நடிகர் விவேக் ஓபராய் புதுமணத் தம்பதிக்கு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்துள்ளார்.
லக்னோ: குடும்ப பகை காரணமாக ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு திருமண பரிசாக அடுக்கு மாடி குடியிருப்பை பரிசாக அளித்துள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலிதா பென்பாஸி (26). கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக இந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் இவர் முகத்தில் ஆசிட் வீசினர். இதனால் லலிதாவின் முகம் முழுவதும் கருகிவிட்டது. இதையடுத்து அவருக்கு 17 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த லலிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இளைஞருக்கு ராங் கால் செய்துள்ளார். இதனால் மறுமுனையில் பேசிய ராகுல் (27) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
தனக்கு நேர்ந்த விஷயங்களை ராகுலிடம் லலிதா மனதிறந்தார். லலிதாவின் வெளியழகு இல்லாவிட்டாலும் அவரது நல்ல மனதை பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. இவர்களது காதலை அறிந்த பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் இவர்களது திருமணத்துக்கு பணஉதவி செய்தனராம்.
இதற்கும் மேலாக, லலிதா- ராகுல் திருமணத்தில் நடிகர் விவேக் ஓபராய் நேரடியாக கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு திருமண பரிசாக அடுக்குமாடி குடியிருப்பை விவேக் ஓபராய் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications