For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல.. அஸ்ஸாம் ஹைகோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

குவகாத்தி: அஸ்ஸாம் உடன்படிக்கையின் படி குடியுரிமைக்கான உறுதி சான்றாக வாக்காளர் அடையாள அட்டையை கருத முடியாது என குவஹாத்தி உயர் நீதிமனறம் தெரிவித்துள்ளது.

மனுதாரர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும்,.தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளதாகவும் கூறிய கூற்றை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிட்டப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெறாதா சுமார் 19 லட்சம் பேர வெளிநாட்டவர் தீப்பாயத்தில் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முடிவில் மேல்முறையீடு செய்ய விரும்புவோர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் ஹைகோர்ட்

அஸ்ஸாம் ஹைகோர்ட்

இதன்படி அஸ்ஸாம் மாநிலத்தில் வசிக்கும் பலர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து முனீந்திர பிஸ்வாஸ் என்பவர் அஸ்ஸாம் உயர்நீதிமன்றத்தில் (குவகாத்தி உயர்நீதிமன்றம் ரிட் மனு தாக்கல் செய்தார்.

வாக்காளார் அடையா அட்டை

வாக்காளார் அடையா அட்டை

அவர் தனனு மனுவீல் தான் பிறப்பால் இந்தியர் என்றும், டின்சுகியா மாவட்டத்தின் மார்கெரிட்டா நகரம் தான் தனது நிரந்தர முகவரி என்றும் கூறியிருந்தார். 1997 ஆம் ஆண்டு வாக்காளர்களின் பட்டியலை அவர் தனது குடியுரிமைக்கான சான்றாக சமர்ப்பித்தார்.

நில பத்திரம் உள்ளது

நில பத்திரம் உள்ளது

பிஸ்வாஸின் கூற்றுப்படி, அவரது தாத்தா மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை அங்கிருந்து 1965 ல் அசாமுக்கு குடிபெயர்ந்து டின்சுகியாவில் குடியேறினார். மனுதாரர் பிஸ்வாஸ், 1970 இல் டின்சுகியாவில் தனது தந்தையால் வாங்கிய ஒரு நிலத்திற்கான பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்தை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தார், ஆனால் தீர்ப்பாயம் அசாமில் வசிப்பவர் என்பதற்கு ஆதாரமாக அதை ஏற்க மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்றம் தள்ளுபடி

உயர்நீதிமன்றம் தள்ளுபடி

இதை எதிர்த்தே பிஸ்வாஸ் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி மனோஜித் பூயான் மற்றும் நீதிபதி பார்த்திவ்ஜோதி சாய்கியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து. அப்போது 1997 க்கு முன்னர் வாக்காளர் பட்டியல்கள் எதுவும் மனுதாரரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், ஜனவரி 1, 1966 க்கு முன்னர் தனது பெற்றோர் அசாமில் நுழைந்ததை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததை ஏற்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் 2016ம் ஆண்டு அஸ்ஸாம் மாநில வழக்கில் , வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி மனுதாரின் மனுவை குவகாத்தி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

English summary
An electoral photo identity card not conclusive proof of citizenship: Gauhati HC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X