பீகாரில் அமைதியாக நடந்து முடிந்த 4வது கட்ட வாக்குப்பதிவு- 58% வாக்குகள் பதிவு
பாட்னா: பீகாரில் ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று 55 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இன்றைய தேர்தலில் மாலை 5 மணிவரை மொத்தம் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இன்றைய தேர்தலில் மொத்த வாக்காளர்கள்1,46,93,294 பேர். இதற்காக 14,139 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற தேர்தலில் 57 பெண்கள் உள்பட 776 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 4 தொகுதிகளில் மாலை 3 மணியுடனும், 8 தொகுதிகளில் மாலை 4 மணியுடனும் வாக்கெடுப்பு நிறைவடைந்தது, இதர 43 வாக்குச்சாவடிகளிலும் வழக்கம்போல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று முடிந்தது. நியாயமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மாநில போலீசாருடன் சேர்ந்து 1,163 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 38 இயந்திரப் படகுகளில் போலீசார் ரோந்துச் சுற்றி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications