For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக.. கம்பி எண்ணப்போகும் முதல் ஹைகோர்ட் நீதிபதி.. கர்ணன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தண்டனை விதிப்பது இதுவே முதல்முறையாகும்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை விதிப்பது இதுவே முதல்முறையாகும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

WB police to arrest Justice C S Karnan immediately SC order

இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதற்கு
பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். மனநல பரிசோதனைக்கும் ஒத்துழைப்பு தரவில்லை.

இந்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழலில் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6மாதம் சிறைதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநிலை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தராததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது தலைமை நீதிபதி கூறியுள்ளார். நீதிபதி கர்ணன் பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க போலீசார் உடனடியாக நீதிபதி கர்ணனை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தண்டனை தருவது இதுவே முதன் முறையாகும்.

{promotion-urls}

English summary
Contempt is contempt irrespective of sitting judge or not, the bench observed. The bench asked the West Bengal police to arrest Justice C S Karnan immediately Superme court order today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X