டிரெஸ் பத்தி ஆபாசமாக பேசினால்… சமையலறைக்கு ஓடிப்போய் விடமாட்டோம்… பெண் தொகுப்பாளர் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்கள் அணியும் ஆடைகள் குறித்து எப்போதும் சர்ச்சைகளை உருவாக்குவதே மத அடிப்படைவாதிகளின் வழக்கமாகிவிட்டது.

அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா முட்டி தெரியும் வகையில் உடை அணிந்திருந்தார். அது தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.

பெண்கள் அணியும் உடைகள் குறித்த சர்ச்சை குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

ஆபாசக் கேள்வி

ஆபாசக் கேள்வி

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மவுலானா யூசூப் அப்பாஸ் என்ற மதகுரு, தொகுப்பாளரை நோக்கி நீ உள்ளாடை அணிந்து கொண்டு வந்து விவாதம் செய்வாயா என்று கேள்வி எழுப்பினார். கோடிக்கணக்கான மக்கள் பார்த்த இந்த நிகழ்ச்சியில் பெண்ணை அவமதிக்கும் வகையில் பேசியதால் அந்த பெண் தொகுப்பாளர் நிலை குலையாமல் பதில் அளித்தார்.

தடுமாறாமல்..

தடுமாறாமல்..

இதுகுறித்து தொகுப்பாளர் பயே டிசவுசா, இதற்காக நான் ஆவேசமடைவேன் என கருதியிருப்பார். நான் நிலை தடுமாறி வேலையை ஒழுங்காக செய்யமாட்டேன் என அவர் நினைக்கிறார்.

விமர்சனங்களை கடந்து..

விமர்சனங்களை கடந்து..

இதுபோன்று பலரை நான் பார்த்துள்ளேன். உடை தொடர்பாக எவ்வளவோ விமர்சனங்களை சந்தித்தும் சனா பாத்திமா, சானியா மிர்சா உள்ளிட்ட பெண்கள் அவர்களுடைய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அனுமதியில்லை..

அனுமதியில்லை..

உடைகளைப் பற்றி விமர்சித்தால், சமையலறைக்குள் ஓடிவிடுவார்கள் என நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகில் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If man attacked woman, they will not go back to kitchen, said private channel presenter.
Please Wait while comments are loading...