For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பு வீடியோ.. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை அடித்து எட்டி உதைத்து தாக்கிய கும்பல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை எட்டி உதைத்து தாக்கிய கும்பல்... பரபரப்பு வீடியோ

    கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சரமாரியாக தாக்கி எட்டி உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    West Bengal BJP candidate for Karimpur bypoll, Joy Prakash Majumdar kicked allegedly by TMC workers

    இந்நிலையில், கரிம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரும் பாஜக துணைத் தலைவருமான ஜாய் பிரகாஷ், நாடியா மாவட்டத்திற்கு காரில் சென்றார். அப்போது திடீரென காரை வழிமறித்த திரிணாமுல் தொண்டர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பும் ஏற்பட்டது-

    அப்போது ஆவேசம் அடைந்த திரிணாமுல் தொண்டர்கள் சிலர், பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாஷை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிவிட்டு காலால் எட்டி உதைத்தனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் கீழே விழுந்த தனது செல்போனை எடுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி எழுந்து வந்தார்.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.. அணை பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லைதமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.. அணை பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லை

    இதைக் கண்ட, பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்து அவரை மீட்டனர். . பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    WATCH West Bengal BJP Vice President and candidate for Karimpur bypoll, Joy Prakash Majumdar manhandled and kicked allegedly by TMC workers as voting is underway in the constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X