உங்க வேலைய மட்டும் பாருங்க! நெருப்போடு விளையாட வேண்டாம்! அமித் ஷாவுக்கு ஆவேச பதிலளித்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா : குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஆவேசமாக பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும், சிஏஏ அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தம் சட்டம் பற்றி வதந்திகளை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்ததோடு, கொரோனா முடிந்ததும் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை செயல்படுத்தும் என்று கூறினார்.
இந்நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) தேவையில்லாமல் கேவலமான அரசியலுக்கு அமித் ஷா பயன்படுத்துவதாகவும், பிஎஸ் எஃப் அமித்ஷாவின் வலையில் விழக்கூடாது என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, " மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் கூட்டாளிகள் எனவும், அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள், சமூகங்களைப் பிரிக்க விரும்புகிறார்கள். நாட்டின் உள்துறை அமைச்சர் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறார், மேலும் அவர் டெல்லி பலத்தை வங்காளத்தில் காட்ட முயல்கிறார்" என குற்றம் சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதா
குடியுரிமை திருத்த சட்ட மசோதா காலாவதியானது என்ற மம்தா, அவர்கள் சிஏஏ பற்றி பேசுகிறார்கள். அப்போது பிரதமர் மற்றும் முதல்வர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா? CAA மசோதா காலாவதியானது. அவர்கள் ஏன் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை? குடிமக்களின் உரிமைகள் தடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையே நமது பலம்," என்று அவர் மேலும் கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பணியை மட்டும் கவனிக்க வேண்டும் எனவும், BSFஇன் வேலையில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரித்த மம்தா, அமித் ஷா ! மத்திய உள்துறை அமைச்சராக உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் என்ன செய்வது என்று எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாம். மாநிலத்தை ஆட்சி செய்ய BSF-ஐக் கேட்காதீர்கள். நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசத்தின் எல்லைகளைக் காப்பது உங்கள் வேலை. மாடு கடத்தல் மற்றும் ஊடுருவலை நிறுத்துங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்" என்று பானர்ஜி கூறினார்.

ம்ம்தா நம்பிக்கை
CAA குறித்த ஊடகங்களின் கேள்விக்கு மேலும் பதிலளித்த பானர்ஜி, 2024 இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் CAA செயல்படுத்தப்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "2024ல் அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று நான் கூறுகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) மற்றும் CAA எதுவும் நடக்காது. அவர் மறைக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் மேற்கு வங்கத்துக்கு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்து ED, CBI உடன் செயல்பட்டு வங்காளத்தை கொளுத்த முயற்சிக்கிறார்கள்." என்றார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications