'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா!
கொல்கத்தா: யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிவாரண தொகை இதுவரை மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கடந்த மாதம் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்.

நிவாரண தொகை ஒதுக்கீடு
இதனையடுத்து புயல் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்தார். ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சேர்த்து ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்தார். இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பிரதமர் வருகையின்போது பெரிய பிரச்னையே நடந்து முடிந்து விட்டது.

மம்தா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் புயல் சேத விவரம் குறித்து கூட்டம் நடத்தியபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதை புறக்கணித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதற்கு விளக்கம் அளித்தார் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் யாஸ் புயல் நிலவரத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு சென்று இதுவரை எந்த நிதியுதவியும் மேற்கு வங்கத்திற்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் நிதி
மேற்கு வங்க விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் கிருஷக்பந்து திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். இந்த் திட்டத்தின்படி விவசாயிகள் இப்போது ஒரு ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட சாகுபடி நிலங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்ட வருடாந்திர நிதி உதவி பெறுவார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

ஒரு பைசா கூட வரவில்லை
மத்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்த பணத்தை தருகிறது. ஆனால் அனைத்து விவசாயிகளும் இதனை பெறவில்லை. யாஸ் புயல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி முதற்கட்ட நிவாரண தொகை ஒதுக்கீடு செய்தார். இதில் இது தொடர்பாக இதுவரை எந்த பணமும் மேற்கு வங்கத்துக்கு வரவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications