மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் மம்தா கட்சிக்கு முன்னிலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மற்றுமொரு கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இம்முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான தனித்துவமான தேர்தல் என்று கூறலாம் கேரளாவில் எதிரெதிர் துருவங்களாக களம் காங்கிரசும் இடதுசாரிகளும் தங்களது பொது எதிரியான மம்தாவின் திரிணமுல் காங்கிரசை வீழ்த்த கை கோர்த்துள்ளன. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்னர் பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. இவற்றில் யார் வெற்றியை பெற போகிறார்கள் யார் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்பது இன்னும் ஐந்தே நாட்களில் தெரிந்துவிடும்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2016. கருத்துக் கணிப்புகள் (மொத்த இடங்கள் 294)
| Parties | தி.காங் | இடது | காங்கிரஸ் | பாஜக | பிற |
|---|---|---|---|---|---|
| ஏபிபி&ஏ சி நீல்சன் (பிப்ரவரி 2016)1* | 182 | இ.+கா.107 | - | 5 | |
| இந்தியா டி வி சி வோட்டர் (மார்ச்2016) | 156 | 114 | 13 | 4 | 7 |
| இ டி வி பங்களா* (மார்ச் 16) | 201 | 34 | 27 | 1 | 3 |
| ஏபிபி&ஏ சி நீல்சன் 2* (மார்ச் 2016) | 178 | இ.சா.+கா. 110 | - | 1 | 5 |
| 24 கந்தா -GFK (மார்ச் 2016) | 200 | இ.சா.+கா.90 | - | 1 | 3 |
| டைம்ஸ் நவ் – இந்தியா டி வி – சி வோட்டர் (ஏப்ரல் 2016) | 160 | 106 | 21 | 4 | 3 |
*ஏபிபி மற்றும் ஏ சி நீல்சன் பிப்ரவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் இடது சாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படாத பட்சத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 197 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு முறையே 74 மற்றும் 16 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப் பட்டிருந்தது.
*28 இடங்களின் முடிவுகள் மிக எளிதாக கணிக்கும்படி இருந்தது என்று இ டி வி பங்களா கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன
*ஏபிபி மற்றும் ஏ சி நீல்சன் குழுவினர் இரண்டாவது முறையாக மார்ச் மாதம் 29 ம் தேதி நடத்திய கருத்துக் கணிப்பில் இடது சாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படாத பட்சத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு முறையே 75 மற்றும் 14 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப் பட்டிருந்தது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications