For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கம் எக்சிட் போல் ரிசல்ட் 2021: பாஜக பக்கம் வீசும் அலை... இந்தியா டுடே, ஜான்கி பாத் கணிப்பு

மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா, ஜான்கி பாத் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா, ஜான்கி பாத் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Recommended Video

    Trinamul Congress-க்கு அதிரி, புதிரி வெற்றி.. News X Exit Poll

    மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. ஆட்சியை பிடிக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    West Bengal Election 2021 Exit Poll Results :BJP to win 134-160 seats predicts India Today

    கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருந்த மேற்கு வங்கத்தை 2011ஆம் ஆண்டு கைப்பற்றினால் மமதா பானர்ஜி. 2016ஆம் ஆண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வரானார். இந்த சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வென்று ஆட்சியை தக்கவைக்க பிகே உடன் வியூகம் அமைத்தார்.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் மமதா பானர்ஜி ஆட்சியை தக்கவைப்பார் என்று கூறியிருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆட்சியையும் அரியணையையும் தக்கவைக்க மமதா பானர்ஜி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜகமேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக

    ஜான்கிபாத் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 162 முதல் 185 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 104 முதல் 121 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 3 முதல் 9 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக ஜான்கிபாத் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 134 முதல் 160 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 130 முதல் 156 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. இடது சாரி கூட்டணி 2 இடத்திலும் இதர கட்சி 1 இடத்திலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

    டுடே சாணக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 169 முதல் 191 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. பாஜக 97 முதல் 119 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இடது சாரிகள் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் இதர கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

    டிவி 9 நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 142 முதல் 152 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. பாஜக 125 முதல் 135 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 26 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    English summary
    West Bengal Election 2021 Exit Poll Results :BJP to win 134-160 seats predicts India Today-Axis My India. As per Jan Ki Baat survey, Mamata Banerjee-led Trinamool Congress (TMC) is expected to win something between 104-121 seats, whereas BJP will get 162-185 and Left+ to get 3-9. Voting for 294 assembly seats in West Bengal were held in eight phases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X