For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்- மமதா ஆறுதல்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாஹிர் ஹூசைனை முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் நேற்று இரவு கொல்கத்தா செல்வதற்காக முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்ய முயன்றனர்.

West Bengal minister Jakir Hossain injured in bomb attack

இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயங்களுடன் ஜாஹிர் ஹூசைன் உயிர் தப்பினார். அமைச்சர் ஹூசைன் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது கொல்கத்தா மருத்துவமனையில் ஜாஹிர் ஹூசைன் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மமதா பானர்ஜி மருத்துவமன்னைக்கு நேரில் சென்று ஜாஹிர் ஹூசைனுக்கு ஆறுதல் கூறினார். இத்தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
West Bengal minister Jakir Hossain and his supporters were injured in bomb attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X