ரூ. 750 இருந்தா ‘இப்படி’ நல்லதும் பண்ணலாம்... ரன்வீர் சிங்கின் க்யூட் வீடியோ!
டெல்லி: ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் 'அட்சய பாத்திரம்' திட்டத்திற்காக நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள விழிப்புணர்வு வீடியோவிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுவாக விழிப்புணர்வு விளம்பரங்கள் என்றாலே பிரபலம் ஒருவர் நின்று கொண்டும், நடந்து கொண்டும், திகட்ட திகட்ட அறிவுரை கூறுவர் என்ற இலக்கணத்தை மீறி, கலகலப்பாக வெளியாகியுள்ளது அட்சய பாத்திரம் திட்டத்திற்கான விழிப்புணர்வு விளம்பரம்.
இந்த விளம்பரத்தில் ரூ. 750 கையில் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என பள்ளிக் குழந்தைகளுடன் லூட்டி அடித்தபடி விளக்குகிறார் ரன்வீர் சிக். இந்த வீடியோவிற்கு யூ டியூபில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த விளம்பரத்தில், ‘உங்களிடம் 750 ரூபாய் இருந்தால் நீங்கள் என்னவெல்லாம செய்வீர்கள்? மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காதலியுடன் படத்துக்கு போகலாம். பிராண்டட் ஷோரூம்களுக்குச் சென்று புதுத்துணிகள் எடுக்கலாம். அழகு சாதனப் பொருட்களுக்காக செலவு செய்யலாம். கிளப் மற்றும் டிஸ்கோவுக்கு சென்று ஆடிப்பாடிக் கொண்டாடலாம். இவற்றுடன் சேர்த்து பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் வயிறார சாப்பிடுவதற்காக ஒரே ஒரு முறை அந்த 750 ரூபாயை ஒதுக்கிப் பாருங்கள்' என காட்சிகள் சுவாரஸ்யமாக தொகுக்கப் பட்டுள்ளது.
இந்த க்யூட் வீடியோவிற்காகவே பலர் இத்திட்டத்திற்கு ரூ. 750 தந்து வருகிறார்களாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications