நீங்க குழந்தையா நடிச்ச படமெல்லாம் பார்த்திருக்கேன்.. குஷ்புவிடம் சிரித்தபடி கூறிய ராகுல் காந்தி!
டெல்லி: நீங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த இந்திப் படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று நடிகை குஷ்புவிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினாராம்.
ஜி.கே.வாசன் புதுக் கட்சியின் கொடியை வெளியிட்ட நாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் குஷ்பு. இதுவரை திமுக நடிகையாக பார்க்கப்பட்ட குஷ்பு தற்போது காங்கிரஸ் நடிகையாகியுள்ளார்.
ஜி.கே.வாசன் கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு லைம்லைட் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இளங்கோவன் தரப்பு குஷ்புவை அன்றைய தினம் கட்சியில் சேர்க்க முடிவு செய்ததாக கூறுகிறார்கள்.

முதல் நாளில் சோனியா காந்தியைச் சந்தித்த குஷ்பு அடுத்த நாளான நேற்று ராகுல் காந்தியையும் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி குஷ்புவிடம் நிறையப் பேசினாராம். அதில் முக்கியமானது, கோஷ்டிப் பூசல் குறித்த அட்வைஸ். தமிழகத்தில் நிறைய கோஷ்டிகள் உள்ளன. அதில் எதிலும் சிக்கி விடாதீர்கள் என்று குஷ்புவைக் கேட்டுக் கொண்டாராம் ராகுல். இதை அருகில் நின்றிருந்த இளங்கோவன் நெளிந்தபடியே கேட்டுக் கொண்டாராம்.
அடுத்து இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பேசினாராம் ராகுல் காந்தி. குஷ்பு குழந்தை வயதில், நடித்த இந்திப் படங்கள் குறித்துப் பேசினாராம்.
நீங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களை நான் பார்த்துள்ளேன் என்று குஷ்புவிடம் ராகுல் கூறியபோது குஷ்பு சிரித்தபடி அதை ஏற்றுக் கொண்டாராம்.
அப்ப, இன்னும் ராகுல் காந்தி "சோட்டா பய்யா" படத்தைப் பார்க்கவே இல்லை போல!
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications