For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்... வாட்ஸ் அப் இனி உலகம் முழுவதும் இலவசமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ் அப் சேவையை உலகம் முழுவதும் உள்ள மக்கள் இனி இலவசமாக பயன்படுத்தலாம் என அதன் நிறுவனர் ஜேன் கெளம் அறிவித்துள்ளார்.

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற காலம் மாறி, செல்போனும், அதில் வாட்ஸ் அப்பும் இல்லாத மனிதர்கள் வாழ்வதே வேஸ்ட் என்ற நிலை உருவாகி வருகிறது.

முன்பெல்லாம் உங்க போன் நம்பர் என்ன எனக் கேட்ட காலம் மாறி, வாட்ஸ் அப்ல இருக்கீங்களா, அதோட நம்பர் எனக் கேட்கும் அளவிற்கு மக்களை தன் வசப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப்...

வாட்ஸ் அப்...

உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்கள் உறவினர்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபர்களும் மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப்பையே பயன்படுத்துகின்றனர்.

முக்கியமான ஆப்...

முக்கியமான ஆப்...

தேர்தல் சமயங்களில், ஆபத்துக் காலங்களில் மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கும் கூட வாட்ஸ் அப் இன்றியமையாத கருவியாக மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கட்டணமில்லை...

கட்டணமில்லை...

தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது முதல் ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இனி ப்ரீ பாஸ்...

இனி ப்ரீ பாஸ்...

இந்நிலையில், இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அதன் நிறுவனர் ஜேன் கெளம் தெரிவித்துள்ளார்.

ரத்து...

ரத்து...

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பின் அனைத்து பதிப்புகளுக்கும் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனம்...

பேஸ்புக் நிறுவனம்...

கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Global instant messaging behemoth WhatsApp on Monday said it will waive its annual subscription fee over the next several weeks as it has not worked well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X