ரேஷனில் 2018 வரைதான் மானிய விலை கோதுமை, அரிசி... மத்திய அமைச்சர் பஸ்வான் திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரேஷன் கடைகளில் 2018ஆம் ஆண்டு வரை மட்டுமே மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுவது லோக்சபாவில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் விளக்கம் அளித்தார். அப்போது உணவு பாதுகாப்பு சட்டப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானியங்களின் விலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Wheat at Rs 2 per kg, rice at Rs 3 to be provided till 2018 : Ramvilas paswan

இதன் காரணமாக 20108ஆம் ஆண்டு வரை நடப்புத் திட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்களை சரிவர அமல் செய்து யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

நாட்டில் உணவு தானியங்கள், பொருட்களைச் சேமிப்பதற்காக தனியார் தொழில்முனைவோர் உத்தரவாத திட்டம் 2008-09-ல் உருவாக்கப்பட்டு குடோன் கட்டுமானங்களுக்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது என்றும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

எனவே 2018 வரை மானிய விலை அரிசி, கோதுமை ஆகியவற்றில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்ற அவர் அதுவரை மானிய விலையில் அரிசி ரூ.3 க்கும் கோதுமை ரூ.2க்கும் வழங்கப்படும் என்றார். மத்திய அமைச்சரின் இந்த திட்டவட்ட அறிவிப்பு எழை எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The prices of subsidised wheat and rice, given at Rs 2 and Rs 3 per kg respectively to 81 crore people in the country, will not be reviewed till 2018, the Lok Sabha was informed today.
Please Wait while comments are loading...