காங்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் யார்? இன்று ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காங்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் யார்?- வீடியோ

  பெங்களூரு: காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் யார் என்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

  கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

  who is the deputy cm in Karnataka? congress MLAS meet

  பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிக்கட்சியாக உருவெடுத்துள்ள போதும் காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

  இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டசபை தலைவர் மற்றும் துணை முதல்வர் யார் என்பது குறித்து தேர்வு செய்யப்படவுள்ளது.

  கர்நாடக சட்டசபை தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ், பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக வெறும் 38 இடங்களை வென்ற ஜேடிஎஸ் கட்சியிடம் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka congress MLAs meets conducts today, to elect assemblyfloor leader and decide who will be the dy CM under Kumaraswamy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற