For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போன் வாய்ஸ் ரெக்கார்டரை வைத்து, கணவனின் காமலீலைகளை அம்பலப்படுத்திய மனைவி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கணவனுக்கு தெரியாமல் அவரது செல்போனில் கால் வாய்ஸ் ரெக்கார்ட் சேவையை ஆக்டிவ் செய்து, அவரின் செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் பெங்களூரை சேர்ந்த பெண்மணி.

பெங்களூரிலுள்ள கன்ட்ரி வெகேஷன்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளர் பணியில் இருப்பவர் ஹரி கிருஷ்ணா (31). இவரது மனைவி கலா (28). இருவரும் 10 வருடங்கள் முன்பு காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடி சென்று திருமணம் முடித்துள்ளனர்.

ஜொள் மன்னன்

ஜொள் மன்னன்

இந்நிலையில் சமீபகாலமாக கணவரின் நடவடிக்கையில் கலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும், பெண்கள் விவகாரத்தில் கணவர் ரொம்ப வீக்காக உள்ளார் என்ற சந்தேகம் கலாவுக்கு எட்டிப் பார்த்துள்ளது. இதை உறுதி செய்ய ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் கலா.

செல்போனில் சிக்கல்

செல்போனில் சிக்கல்

ஹரி கிருஷ்ணன் பயன்படுத்தும், செல்போனில், வாய்ஸ் கால் ரெக்கார்டரை டவுன்லோடு செய்து, அதை ஆன் செய்து வைத்துவிட்டார். கால் ரெக்கார்டர் வேலை செய்வது தெரியாமல், ஹரி கிருஷ்ணன் வழக்கம்போல தனது செல்போனை பயன்படுத்தியுள்ளார்.

செல்போனில் பதிவு

செல்போனில் பதிவு

சில நாட்கள் கழித்து, ஹரிகிருஷ்ணன் போனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கலா, அந்த போனில் பதிவான வாய்ஸ் ரெக்கார்டுகளை போட்டு கேட்டுள்ளார். அப்போதுதான் அவரது கணவரின் சுய ரூபம் முழுமையாக கலாவுக்கு தெரியவந்துள்ளது.

ஆபாச பேச்சுக்கள்

ஆபாச பேச்சுக்கள்

'நீ ஒரு குழந்தைக்கு தாயா இருந்தாலும், செக்சியாவும், இளமையாவும் இருக்கியே', 'என் கேபினுக்கு வா, செக்ஸ் வைத்துக்கோள்வோம்', 'நான் உன்னை எப்போதும் மகிழ்ச்சியா வைத்துக் கொள்கிறேன்'. 'நீ என் கூட ".....", இல்லைன்னா செத்துடுவேன் போல இருக்கு'. இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் ஹரி கிருஷ்ணன் பேசியுள்ளதை கலா அறிந்து அதிர்ச்சியானார்.

பேஸ்புக் சாட்டிங்

பேஸ்புக் சாட்டிங்

கணவனின் கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த கலா ஒரு ஐடியா செய்தார். கணவன் பேசிய சில பெண்களை தொடர்பு கொண்டு, இதுகுறித்து புகார் அளிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அப்பெண்கள் தயங்கினர். இருப்பினும் கலா விடவில்லை. திவ்யா என்ற பெண்ணின் கணவரை பேஸ்புக் மூலம் அறிந்து கொண்டு அவருடன் சாட்டிங் செய்து, அவரின் தொலைபேசி நம்பரை வாங்கி நடந்த சம்பவங்களை சொல்லியுள்ளார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

சாப்ட்வேர் இன்ஜினியராக துபாயில் வேலை பார்க்கும் திவ்யாவின் கணவன், உடனடியாக மனைவிக்கு போன் செய்து விவரம் கேட்டுள்ளார். அப்போது, திவ்யா நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். தனது போனசை கட் செய்துவிடுவதாகவும், வேலையைவிட்டு தூக்கிவிடுவதாகவும், ஹரிகிருஷ்ணன் மிரட்டியதால் வெளியே சொல்லாமல் அவர் பேசிய ஆபாச வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்ததாக திவ்யா தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பெங்களூர் வந்த திவ்யாவின் கணவர், மைக்கோ லேஅவுட் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

பிற பெண்கள் அச்சம்

பிற பெண்கள் அச்சம்

இதுகுறித்து அவர் கூறுகையில், சில நாட்கள் பெங்களூரில் இருந்து வேலை பார்க்க அலுவலகத்தில் அனுமதி பெற்று வந்துள்ளேன். கோர்ட் நடைமுறைகள் முடியும்வரை இங்கேயே இருந்து ஹரிகிருஷ்ணனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க உள்ளேன் என்றார். இதனிடையே பாதிக்கப்பட்ட பிற பெண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பாதிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டனராம்.

வரதட்சணை புகாரும்

வரதட்சணை புகாரும்

கணவனை ஆதாரத்தோடு மாட்டி வைத்த கலா, ஹைதராபாத் காவல் நிலையத்தில், ஹரிகிருஷ்ணனுக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகாரையும் பதிவு செய்துள்ளார். இதனால் சட்டத்தின் பிடிகளில் சிக்கி திணறிவருகிறார் ஹரிகிருஷ்ணன். சபாஷ்.. கலா போன்ற பெண்கள் உருவாகுவதே காமுகர்களை ஒழிக்கும் வழியாகும். (குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிகிருஷ்ணன் தவிர்த்த பிற பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

English summary
On discovering her husband had been stalking and harassing his female colleagues, this courageous woman tracked down one victim and gave her the courage to speak out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X