For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களை மிஸ் பண்ணுவேன்: மன்மோகன் சிங்கிடம் தெரிவித்த ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்மோகன் சிங் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்மோகன் சிங்குடன் தொலைபேசி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

பாராட்டு

பாராட்டு

உங்களுடன் சேர்ந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரை நான் வெகுவாக பாராட்டியது உண்டு. அதில் நீங்களும் ஒருவர்.

மிஸ் யூ

மிஸ் யூ

உங்கள் தலைமை உலக சவால்களை சந்திக்க மிகவும் ஒத்துழைப்பு நல்கியது. இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவுக்கு உங்கள் பதவிக்காலம்

நல்லவிதமாக அமைந்தது. உங்களுடன் இனி பணியாற்ற முடியாமல் போயுள்ளது. உங்களை நான் மிஸ் பண்ணுவேன்.

ஓய்வு

ஓய்வு

நீங்கள் நன்றாக ஓய்வு எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்றார் ஒபாமா.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் அடைந்துள்ளது. இந்த உறவை வலுப்படுத்த மோடி அரசு அனைத்தையும்

செய்யும் என்று நான் நம்புகிறேன் என மன்மோகன் சிங் ஒபாமாவிடம் தெரிவித்தார்.

English summary
US President Barack Obama called up Prime Minister Manmohan Singh soon after he demitted office and said he was one of the few public leaders whom he "admired" and that he would
 
 "miss" working with him on "day-to-day basis."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X