For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால்...! டுவிட்டரில் கெஜ்ரிவால் மோடி நெகிழ்ச்சி உரையாடல்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால் - வீடியோ

    டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்ற நிலையில் அந்த விழாவில் பங்கேற்க முடியாத அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்தார் . அதற்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால், நீங்கள் இந்த விழாவிற்கு வருவீர்கள் என எதிர்பார்த்தேன் என பதில் அளித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் நேற்று டெல்லியின் சின்னமான செங்கோட்டைக்கு வெளியே ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக்கொண்டனர்.

    wish you could come today, but I understand ..! : Arvind Kejriwal, PM Modis Twitter Exchange

    இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் ஏழு டெல்லி எம்.பி.க்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பாஜக எம்எல்ஏக்களை கெஜ்ரிவால் அழைத்திருந்தார், ஆனால் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அதற்கு பதில் பிரதமர் மோடி தனது நாடாளுமன்றத் தொகுதி வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழலில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கு பதில் அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார், நீங்கள் விழாவில் பங்கேற்பீர்கள் என பெரிதும் எதிர்பார்த்தேன். எனினும் உங்களது பிஸியான சூழலை புரிந்து கொண்டேன். டெல்லியை அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நகரமாக மாற்றுவதற்கு நாம் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

    We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்! We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்!

    English summary
    ' I wish you could come today, but I understand you were busy. We must now work together towards making Delhi a city of pride for all Indians': Arvind Kejriwal, PM Modi's Twitter Exchange
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X