For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவில் இணையப் போவதில்லை- தே.ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு: எதியூரப்பா

By Mathi
Google Oneindia Tamil News

With praise for Narendra Modi, Yeddyurappa reaches out to BJP
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியில் தாம் இணையப் போவது இல்லை.. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்போம் என்று கர்நாடகா ஜனதா கட்சித் தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை கர்நாடக ஜனதா கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எதியூரப்பா வரவேற்றிருந்தார். அத்துடன் தாம் மீண்டும் பாஜகவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியில் இணைவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம். நரேந்திர மோடி நல்ல நிர்வாகி. அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதிய ஜனதாவில் இணையாவிட்டாலும் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கிறோம் என்றார்.

English summary
Former Karnataka Chief Minister BS Yeddyurappa today effusively praised Narendra Modi , in a clear olive branch to the BJP after he quit the party and formed his own outfit last year. At a meeting of his Karnataka Janata Party (KJP) today, Mr Yeddyurappa reportedly shared that Mr Modi "can be a good administrator" and said he would extend full support to the BJP, but would not merge with his former party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X