ராக்கி கயிறு வாங்க கணவர் பணம் தரலையே... விரக்தியில் இளம்பெண் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, ராக்கி கயிறு வாங்க கணவர் பணம் கொடுக்காததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சகோதர பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திங்கள்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, பெண்கள் தங்கள் சகோதரர்களின் மீது உள்ள பாசத்தை வெளிக்கொரும் வகையில் அவர்களது கையில் ராக்கி கட்டுவர். இதற்காக சகோதரர்களும் தங்களால் இயன்ற பரிசு பொருள்களை அவர்களுக்கு வாங்கித் தருவர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சகாபுராவை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி மகாதேவி (23). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அசோக்கிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

அடிக்கடி தகராறு

அடிக்கடி தகராறு

அடிக்கடி மது குடித்துவிட்டு மகாதேவியிடம் சண்டை போடுவார் அசோக். ரக்ஷாபந்தன் தினமான திங்கள்கிழமை அன்று தனது சகோதரருக்கு ராக்கி கயிறு கட்டவேண்டும் கட்ட அதற்கு ரூ.10 வேண்டும் என்று அசோக்கிடம் கேட்டார் மகாதேவி.

பணம் கொடுக்க மறுப்பு

பணம் கொடுக்க மறுப்பு

ஆனால் அசோக்கோ அவருக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த மகாதேவி, அசோக் வெளியே சென்றவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சகாபுரா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மகாதேவியின் உடலை கைப்பற்றினர். ராக்கி கயிறு வாங்க கணவர் ரூ.10 கொடுக்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 23-year-old woman allegedly committed suicide when her husband refused to give her Rs 10 for buying rakhi on the occasion of Raksha Bandhan.
Please Wait while comments are loading...