விளையாட்டு காரில் தலைமுடி சிக்கி இளம்பெண் மரணம்.. கணவன் கண் முன்பே நடந்த கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விளையாட்டு காரில் தலைமுடி சிக்கி இளம்பெண் மரணம் | Oneindia Tamil

  சண்டிகர்: ஹரியானாவில் உள்ள பார்க் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி விளையாட்டு காரில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார். மரணமடைந்த புனித் கவுர் என்ற பெண்ணின் வயது வெறும் 28 ஆகும்.

  இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்று பார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.

  இந்தச் சம்பவம் அந்தப் பெண்ணின் கணவன் கண் முன்னே நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் அமர்தீப் சிங் இதுகுறித்து விளக்கி இருக்கிறார்.

  கொண்டாட்டம்

  கொண்டாட்டம்

  புனித் கவுர் தன் கணவர் அமர்தீப் சிங் மற்றும் ஒரு மகன், மாமியாருடன் டெல்லியில் இருந்து ஹரியானா சென்றுள்ளார். அங்குச் சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்கள். அப்போது பிஞ்சுர் கார்ட்னஸ் என்ற பகுதியில் இருக்கும் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.

  என்ன நடந்தது

  அங்கு விளையாடுவதற்காக இருக்கும் பேட்டரி காரில் எறியுள்ளனர். கணவன் மனைவி ஒரு காரிலும், மகன், பாட்டி இன்னொரு காரிலும் சென்றுள்ளனர். அதில் முதல் சுற்று முடிக்கும் போது புனித் கவுர் மிகவும் சத்தமாகக் கத்தி இருக்கிறார். அருகில் இருந்த கணவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

  மொத்தமாக வந்தது

  மொத்தமாக வந்தது

  கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்ணின் முடி மொத்தமாக உரிந்து வந்துள்ளது. தலையில் தோலும் உரிந்துள்ளது. பின்புதான் டயரில் முடி மாட்டியது கண்டுபிடிக்கப்ட்டது. அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  மரணம்

  மரணம்

  ஆனால் சிகிச்சை பலன் இன்றி அந்தப் பெண் மரணம் அடைந்தார். காரின் பின் டயரில் முடி சிக்கி அவர் மரணம் அடைந்துள்ளார். தற்போது அந்த பார்க் நிர்வாகிகள் மீது கணவன் வழக்குத் தொடுத்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Woman named Puneet Kaur, 28, dies after her hair stuck in go-kart in a park in Hariyana. Police filed complaint against the park.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற