For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் என்பதால் யோகி என்னை திட்டி வெளியேற்றினார்.. மோடியிடம் உ.பி எம்.பி பரபரப்பு புகார்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேறியதாக பாஜகவை சேர்ந்த தலித் எம்.பி சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேறியதாக பாஜகவை சேர்ந்த தலித் எம்.பி சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்து இருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோட்டோ லால். தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று இவர் புகார் அளித்துள்ளார்.

Yogi insulted me because I am a Dalit complaints UP MP to Modi

தன்னுடைய தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை மதிப்பதில்லை என்றுள்ளார். உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திர நான் பாண்டே, சுனில் பன்சால் ஆகியோர் தன்னை மோசமாக நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார். மோசமாக திட்டி அவரை வெளியே அனுப்பி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல் தேசிய எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையத்திடமும் புகார் கடிதம் அளித்து இருக்கிறார்.

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English summary
Uttar Pradesh CM Yogi insulted me because I am a Dalit complaint UP MP Chotta laal to Modi. Modi assured to look into this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X