அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது பாருங்க.. கான்பூரிலும் ஒரு "கோவை சரளா"!
2 பேர் கற்பழிக்க முயன்றதால் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்தார் இளம்பெண்.
கான்பூர்: நம்ம ஊர் கோவை சரளா மாதிரி நாடெல்லாம் அங்கங்கே இருப்பாங்க போல! வம்பு பண்ணும் ஆண்களுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஈட்டா என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்துக்கு இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து போய் கொண்டிருந்தார். அப்போது அவரை 2 ஆண்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தார். அமைதியாக போவதை கவனித்த 2 பேரும் இளம்பெண்ணை திடீர் என வழிமறித்துள்ளனர். அதோடு அவரை கற்பழிக்கவும் முயன்றனர்.

சந்திரமுகியாக மாறினார்
அதுவரை அமைதியாக இருந்த அந்த பெண் அப்போதுதான் சந்திரமுகியாக மாறினார். 2 பேரையும் இழுத்து பிடித்து நடுரோட்டிலேயே அடிக்க ஆரம்பித்துவிட்டார். சரமாரியாக பெண் தாக்குவதை அந்த இளைஞர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருவரையும் மாறி மாறி தெருவிலேயே கைகளாலும், கால்களாலும் புரட்டி புரட்டி எடுத்தார்.

செருப்பால் அடித்தார்
பிறகு விட்டுவிடுவார் என்று பார்த்தால், அப்போதுதான் அந்த பெண் அவரது செருப்பையே கழட்டுகிறார். கொஞ்ச நேரம் செருப்பால் இளைஞர்களை இன்னும் வெளுத்தார். "எங்களை விட்டு விடு.. தெரியாம பண்ணிட்டோம்.." என்று இருவரும் அந்த பெண்ணிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால் ஊரே ஒன்றுகூடி விட்டது.

சிறை பிடித்தனர்
எல்லோரும் வேடிக்கை பார்க்க பார்க்க இளைஞர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அடி தடி காட்சிகள் எல்லாம் முடிந்த பிறகு ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்கள். இளைஞர்களை சிறைபிடித்து கட்டி போட்ட மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தார்கள்.

வீடியோ வைரல்
விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு கைது செய்து அழைத்து சென்றார்கள். பலாத்காரம் செய்ய வந்த 2 பேரை இளம்பெண் தெருவில் புரட்டி புரட்டி செருப்பால் அடித்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications