56 அங்குலம் மார்பளவு கொண்டவர் மோடி.. நான் எவ்வாறு அறைய முடியும்?... மம்தா கேட்கிறார்
கொல்கத்தா: 56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு இன்னும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில், 59 தொகுதிகளில், 6 வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் மே 12ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஜனநாயகத்தால் அறைவேன்
இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹாத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை என்றும் ஜனநாயகத்தால் அறைவேன் என்று தான் கூறினேன் எனவும் விளக்கமளித்தார்.

கை உடைந்துவிடும்
மேலும், நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன்; அவரை அறைந்தால் எனது கை உடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என்றும் மம்தா பானர்ஜி கேட்டுள்ளார். அறைவோ அல்லது தொடவோ எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்

ஆசீர்வாதமாக எண்ணுவேன்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ஜனநாயகத்தின் வழியாக பிரதமர் மோடியை ஓங்கி அறைய வேண்டும்" என்று பேசினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, "மம்தாவிடமிருந்து அறை வாங்கினால் கூட, அதை ஆசீர்வாதமாகத்தான் எண்ணுவேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

வார்த்தை போர்
பிரதமர் வேட்பாளர் ரேசில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரும் பேசப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், தேசிய அளவிலான அரசியலில், மோடிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

பதிலளிப்பார்
காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு பிரச்சார கூட்டங்களில் பதிலளித்து வரும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கும் பதிலளிப்பார் என கூறப்படுகிறது. ஜாதி பிரச்சனையில், "நான் ஏழை ஜாதி" என்று காங்கிரஸ் கட்சிக்கு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications