மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அணி திரளும் எதிர்க்கட்சி இளைஞர் பிரிவுகள்.. திமுகவும் களமிறங்குகிறது
Recommended Video

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி அரசின் கொள்களை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவு கூட்டணி அமைத்து போராட்டம் நடத்த உள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவினர் இணைந்து வரும் அக்டோபர் 8 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
ஒருங்கிணைந்த இளைஞர் அமைப்பு என்ற பெயரின்கீழ் கடந்த 4ஆம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
[நானா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்.. சொல்லி அடிச்ச கில்லி எச்.ஏ.எல்!]

ஜந்தர் மந்தர்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளை எதிர்த்து டெல்லியில் அக்டோபர் 8 ஆம் தேதி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

திமுகவும் பங்கேற்பு
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய யூத் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பு, சமாஜ்வாதி கட்சியின் சமாஜ்வாதி யுவஜன் சபா, தேசியவாத காங்கிரஸ் தேசிய மாணவர் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின், யுவ ராஷ்டிரிய லோக் தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின், ஜார்க்கண்ட் யுவ மோர்ச்சா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அமைப்பு, பார்வர்டு பிளாக் கட்சியின் அனைத்து இந்திய இளைஞர் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின், முஸ்லிம் இளைஞர் லீக் ஆகியவை இதில் பங்கேற்க உள்ளன.

பிரச்சினைகள்
விவசாயிகள் தற்கொலை, ஜாதி மற்றும் மதம் சார்ந்த வன்முறைகள் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெருகி வருவது இளைஞர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முத்ரா கடன், ரபேல் விமான ஊழல் போன்றவற்றை முன்வைத்து இந்த போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

கூட்டணி இல்லை
அதே நேரம் இது இளைஞர்களுக்கான போராட்டம் தானே தவிர அரசியல் கூட்டணிக்கான இப்டி கிடையாது என்று இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே தெரிவித்தார்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு!












Click it and Unblock the Notifications