நானா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்.. சொல்லி அடிச்ச கில்லி எச்.ஏ.எல்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் ரபேல் போர்விமானத்தைத் தயாரிக்க முடியாது என்று கூறிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருத்தமான பதிலடி தருவது போல அந்த நிறுவனம் ஈட்டியுள்ள வருவாய் கணக்கு வந்து சேர்ந்ந்துள்ளது.

அதுக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அனுபவம் வாய்ந்த இந்த நிறுவனத்தை விட்டு விட்டு ஒரு பொம்மை விமானத்தைக் கூட தயாரித்திராத ரிலையன்ஸ் நிறுவனத்தை ஏன் மத்திய அரசு தேர்வு செய்தது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்தான்.

HALs record Turnover in 2017-18 FY

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது எச்ஏஎல் நிறுவனம். 2017-18 நிதியாண்டில் எச்ஏஎல் ஈட்டிய வருமானம் ரூ. 18,28,386 லட்சமாகும். இது முந்தைய நிதியாண்டில் 17,60,379 லட்சமாக இருந்தது.

2017-18 நிதியாண்டில் 40 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது எச்ஏஎல் நிறுவனம். இதில் சுகோய் 30 எம்கேஐ, எல்சிஏ தேஜாஸ், டோர்னியர் டிஓ 228, ஏஎல்எச் த்ருவ், சீட்டல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடக்கமாகும். கூடுதலாக 105 புதிய என்ஜின்களை எச்ஏஎல் தயாரித்துள்ளது. இதுதவிர 220 விமானங்கள், ஹெலிகாப்டர்களை அது ஓவர்ஹால் செய்துள்ளது. விண்வெளித் திட்டங்களுக்குத் தேவையான 146 என்ஜின்களையும் இது தயாரித்துள்ளது. இதுதவிர 550 பல்வேறு வகை என்ஜின்களையும் அது தயாரித்துள்ளது.

நேற்று பெங்களூரில் நடந்த எச்ஏஎல்லின் 55வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தின்போது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 126 ரபேல் ரக விமானங்களைத் தயாரிக்க எச்ஏஎல்லுக்கு திறமை கிடையாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில் அதை முறியடிக்கும் வகையில் இந்த புள்ளி விவரம் வந்து சேர்ந்துள்ளது. திறமை இல்லாமலா இத்தனை வேலைகளை எச்ஏஎல் செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுகோய் தான் இருப்பதியே கடினமான போர் விமானம். அதையே எச்ஏஎல் சர்வசாதாரணமாக செய்து வருகிறது. அதேபோல பல்வேறு வகையான மிக் ரக போர் விமானங்களையும் அதுதான் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ரபேல் எல்லாம் அதற்கு கொசுரு மாதிரிதான் இருந்திருக்கும்.. ஆனால் மத்திய அரசுதான் எச்ஏஎல் மீது நம்பிக்கை வைக்காமல் போய் விட்டதே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+