For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமியால் பாதை மாறிய குடும்பம் – 10 வருடத்திற்குப் பின் இணைந்த ”பாச மலர்கள்”!

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இயற்கை சீரழிவான சுனாமி அன்று காணாமல் போன மகன், மகளுடன் தாய் ஒருவர் 2014 இல் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி. ஜமாலியா சுமத்ரா தீவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தார்.

உள்ளே அவரது மூன்று குழந்தைகளும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.

10 years after tsunami, Indonesian family reborn

அவசரமாக கிளம்பிய குடும்பம்:

திடீரென்று ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தால் நிலைகுலைந்து இருக்கும் போது, "அலை வருது...அலை வருது" என்று மக்களின் அலறல் கேட்டது. பதறிப் போன ஜமாலியாவின் குடும்பம் ஒரு வண்டியில் அவசரமாக கிளம்பியது.

சிக்கிக் கொண்ட குடும்பத்தினர்:

இருந்தும் 500 மீட்டர் உயரத்திற்கு வந்த அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

குழந்தைகளை இழந்து தவிப்பு:

விழித்துப் பார்த்தபோதுதான் தன் 4 வயது மகள் ஜன்னாவையும், 7 வயது மகன் ஆரிப்பையும் இழந்தது ஜமாலியாவிற்கு தெரிய வந்தது.

கண்ணீரில் கரைந்த தேடல்:

இத்தனை வருடங்களில், பல இடங்களில் தேடியும் தன் குழந்தைகள் கிடைக்காத போதும் நம்பிக்கை இழக்காத ஜமாலியா நிச்சயம் தன் குழந்தைகள் உயிரோடு இருக்கும் என்று கண்ணீர் மல்க அருகில் உள்ள குடும்பத்தினரிடம் சொல்லி வந்தார்.

கனவில் வந்த பெண்மணி:

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது அண்ணன் ஜைனுதீன் தன் கனவில் மூன்று நாட்களாக ஒரு பெண் வருவதாக தன் தங்கை ஜமாலியாவிடம் சொன்னார்.

சந்தித்த தாய்:

முதலில் அது தொலைந்து போன அவரது மகள் என்றே நினைத்தார். அடுத்த நாளே தன் கனவில் வந்த பெண்ணை ஒரு டீக்கடைக்கு அருகே சந்தித்தார்.

பெற்றோரை இழந்த பெண் குழந்தை:

அந்த கடையின் உரிமையாளர் அந்தப் பெண் சுனாமியால் பெற்றோரை இழந்த அனாதை என்றதும், அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து தன் தங்கையிடம் காட்டியுள்ளார்.

ஏழைக் குடும்பத்தால் வளர்ப்பு:

பத்து வருடங்கள் ஆன போதும் ஜமாலியா அது தனது மகள் தான் என்று தீர்மானமாகச் சொன்னார். உடனே இருவரும் ஜன்னாவை சந்தித்தனர்.

கண்டெடுத்த மீனவர்:

ஜமாலியாவின் வீட்டிலிருந்து தொலைவிலுள்ள பான் யாக் தீவில் ஜன்னாவைக் கண்டெடுத்த மீனவர் ஒருவர் தனக்கு தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒப்படைத்துள்ளார்.

வீட்டிற்கு வருகை:

இந்த பத்து வருடங்களில் இது போல் மூன்று குடும்பங்களால் வளர்க்கப்பட்ட அந்தப் பெண் கடைசியாக சாம்னி எனும் வயதான பெண்மணியின் வீட்டில் இருந்த போது ஜமாலியா அவரைக் கண்டுபிடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மகனும் கிடைத்த சந்தோஷம்:

தன் மகளோடு சேர்ந்த சில தினங்களிலேயே தன் மகன் ஆரிப்பும் கிடைத்ததால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜமாலியா. இந்த சம்பவம் சுனாமியால் தன் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
It all started with a dream that led to a chance meeting: A girl who had been swept away by the Indian Ocean tsunami a decade ago
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X