Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிபான்களின் கோர முகம்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. 120 பெண் நீதிபதிகள் தலைமறைவு.. அதிர்ச்சி தகவல்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் அங்கு இருந்து விலகிய பின்னர் தாலிபான்கள் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆப்கானில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து விட்டனர். தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு அங்கு பெண்களின் உரிமை தொடர்ந்து நசுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 பெண் நீதிபதிகள்

பெண் நீதிபதிகள்

இந்த நிலையில் தாலிபான்கள் வருவதற்கு முன்பு அங்கு 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த பெண் நீதிபதிகள் பணியில்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக சர்வதேச பெண்கள் நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில் நபிலா என்ற பெண் நீதிபதியாக இருந்தார்.

 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

அப்போது கணவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு விவாகரத்து வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான கணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்பு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பெண் நீதிபதி நபிலாவால் தண்டனை பெற்று வந்த சில ஆண்களும் அடங்குவார்கள்.

Recommended Video

    பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது.. நாட்டு மக்களுக்கு Taliban-களின் புதிய கட்டுப்பாடு.
     பெண் நீதிபதி உருக்கம்

    பெண் நீதிபதி உருக்கம்

    தாலிபான்களின் அடக்குமுறையால் நீதிபதி நபிலாவும் பணியை விட நேர்ந்தது. அவர் தனது கணவர் மற்றும் மூன்று இளம் மகள்களுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தன்னால் தண்டனை பெற்ற கைதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வர ஆரம்பித்ததாக நபிலா கூறியுள்ளார். ''நான் என் வேலையை இழந்தேன், இப்போது என்னால் வெளியே செல்லவோ அல்லது சுதந்திரமாக எதுவும் செய்யவோ முடியாது, ஏனெனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளால் எனக்கு ஆபத்து உள்ளது'' என்று உருக்கமுடன் கூறுகிறார் பெண் நீதிபதி நபிலா.

     பெண்களுக்கு இருண்ட காலம்

    பெண்களுக்கு இருண்ட காலம்

    நீதிபதி நபிலாவை தவிர குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து வழக்குகளில் சட்டப்படி பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கிய பல்வேறு பெண் நீதிபதிகள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண் நீதிபதிகளுக்கு இருண்ட எதிர்காலம் காத்திருக்கிறது என்று நீதிபதி ஒருவர் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+