For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பனிமூட்டம்.. கண் மண் தெரியாமல் மோதிக் கொண்ட 150 வாகனங்கள் – 2 பேர் பரிதாப பலி!

Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்டாம்: ஆம்ஸ்டர்டாமில் கடும் பனிமூட்டம் காரணமாக 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பரபரப்பாக இயங்கும் டச்சு நெடுஞ்சாலையில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

26 பேர் படுகாயம்:

26 பேர் படுகாயம்:

இந்த விபத்தில் கிட்டதட்ட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலையிலேயே விபத்து:

காலையிலேயே விபத்து:

காலை 8 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தானது, ஏ58 நெடுஞ்சாலையில் தெற்கு நகரங்களான கோய்ஸ் மற்றும் மிடில்பர்க்குக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்டுள்ளது.

2 பேர் பரிதாப பலி:

2 பேர் பரிதாப பலி:

"இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளனர்" என்று ஜீலேண்டின் காவல்துறை அதிகாரியான எஸ்தர் பூட் தெரிவித்துள்ளார்.

நொறுங்கிய 150 வாகனங்கள்:

நொறுங்கிய 150 வாகனங்கள்:

கடும் பனிப்பொழிவினால், சாலையின் இரண்டு புறமும் ஏற்பட்ட இந்த விபத்தானது, கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கித்தள்ளியுள்ளது.

50 ஆம்புலன்ஸ்கள்:

50 ஆம்புலன்ஸ்கள்:

சம்பவம் நடந்த ஹெயின்கென்ஸாண்ட் கோய்ஸில் இருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 50 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை:

மருத்துவமனையில் சிகிச்சை:

மிகவும் கடுமையாக காயமடைந்தவர்கள் ரோட்டர்டேமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிவேக வாகனங்கள்:

அதிவேக வாகனங்கள்:

ஆனாலும், இன்னும் அப்பகுதியில் அதிவேகத்தில்தான் மக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர் என்று மேலும் அதிகாரிகள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

English summary
Two people died on Tuesday when around 150 vehicles smashed into each other in pile-ups caused by heavy fog on a busy Dutch highway during rush hour, rescue officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X