For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளம் விமான விபத்து 18 பேர் பலி: உடல்கள் மீட்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நேபாளம்: நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நேரிட்ட விமான விபத்தில் அதில் பயணம் செய்த 18 பேரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் இருந்து ஜம்லா என்ற நகருக்கு மதியம் 12.40 மணிக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது.

இதில் பைலட், 2 விமான சிப்பந்திகள், ஒரு குழந்தை, நெதர்லாந்து நாட்டுக்காரர் உள்பட 18 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் 1.45 மணிக்கு ஜம்லா நகரில் தரையிறங்க வேண்டும். ஆனால் 1.13 மணி முதல் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அர்ஹாக்ஹஞ்சி என்ற இடத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன. விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Security personnel looking for the missing Nepal Airlines plane recovered 18 bodies and the plane's wreckage at Arghakhanchi district on Monday. With this, it is now confirmed that all the 18 board, including a child and a Danish citizen, died in the crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X