'லேப்டாப்' ஹீட் ஆவதாக கூறிய தந்தை.. "தண்ணீர் தொட்டியில் போட்டு அலசிய சுட்டி குழந்தை"..பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: தனது மடிக்கணினி ஹீட் ஆவதாக தந்தை கூறியதை கேட்ட அவரது 2 வயது குழந்தை தந்தைக்கு உதவ வேண்டும் என நினைத்து அந்த மடிக்கணினியை எடுத்து தண்ணீர் பக்கெட்டில் போட்டு மூழ்க செய்து சோப்பு போட்டு அலசும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிறு குழந்தைகள் செய்யும் விளையாட்டுகள் மற்றும் சேட்டைகள் பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

குறிப்பாக அவர்கள் செய்யும் சில புத்திசாலித்தனமான செயல்கள் பெற்றோரையே வியப்படைய செய்யும்.

இணையத்தில் பரவும் வீடியோ

இணையத்தில் பரவும் வீடியோ

இதிலும் பெண் குழந்தைகளை சொல்ல வேண்டும் என்றால் தந்தையின் மீது அதீத பாசம் வைத்திருப்பர். தந்தை சொல்வதை கேட்டும்.. தந்தைக்காக உதவுவதையும் பார்த்திருப்போம். அந்த வகையில் தான் சீனாவில் 2 வயது குழந்தை ஒன்று தனது தந்தைக்கு உதவ வேண்டும் என்று நினைத்து ஒரு செயலை செய்துள்ளது. அந்த செயல்தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தந்தைக்கு உதவ நினைத்து

தந்தைக்கு உதவ நினைத்து

பால் மனம் மாறாத அந்த பாசமிகு குழந்தை காலை சாப்பிடும் வேளையில் லேப்டாப் ஹீட் ஆக இருக்கிறது என்று மனைவியிடம் கூறியதை ஆழ்ந்து கவனித்து இருக்கின்றாள். இதனால் தந்தைக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று நினைத்த அந்த பாச மகள் ஹீட் ஆக இருந்தால் தண்ணீரில் நனைத்தால் ஜில் என்று ஆகிவிடும் என கருதி அந்த லேப்டாப்பை தண்ணீரில் முக்கி எடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மடிக்கணினிக்கு சோப்பு போட்ட குழந்தை

மடிக்கணினிக்கு சோப்பு போட்ட குழந்தை

சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், 2 வயது குழந்தை கையில் சோப்புடன் தேய்த்துக்கொண்டிக்கிறது. கீழே உள்ள பக்கெட் போன்ற டப்பாவில் பாதிளவு தண்ணீர் நிரம்பியிருக்க அதற்குள் ஆப்பிள் லேப்டாப் ஒன்று இருக்கிறது. மேலும் அந்த லேப்டாப்பில் உள்புறம் உள்ள மானிட்டர் மற்றும் கீபேர்டில் சோப்பு நுரை நிரம்பி இருக்கிறது. இந்த குழந்தை கைகளால் லேப்டாப்பை தேய்த்துக்கொண்டிருக்கிறது போல வீடியோ பதிவாகியுள்ளது.

வாஷ் ரூமில் சத்தம் கேட்டது

வாஷ் ரூமில் சத்தம் கேட்டது

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கூறுகையில், நான் வீட்டில் வேலை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது வாஷ் ரூமில் இருந்து சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 2 வயது மகளும் அங்கே நிற்பது போல இருந்தது. என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று பார்ப்பதற்காக அருகில் சென்று பார்த்தேன். அப்போது அவள் கணவரின் விலையுயர்ந்த மடிக்கணினியை தண்ணீரில் போட்டு அலசிக்கொண்டிருந்தாள்.

நெஞ்சே பதறிப்போனது

நெஞ்சே பதறிப்போனது

இதை பார்த்தவுடன் எனது நெஞ்சே பதறிப்போனது.. விலையுயர்ந்த மடிக்கணினியை இப்படி செய்துவிட்டாளே என்று.. இருந்தாலும் அவள் செய்தது ஒருபுறம் சந்தோசத்தை தான் கொடுத்தது. ஏனென்றால் காலையில் நாங்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்த போது எனது கணவர் மடிக்கணினி ஹீட் ஆக இருக்கிறது.. தேவையில்லா பைல்களை அழிக்க வேண்டும்.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

இதை அப்போது கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்த எனது மகள் தந்தைக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் இப்படி மடிக்கணினியை தண்ணீரில் நனைத்து விட்டாள் என்று கூறினார். இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+