மொத்தம் 7 மைதானங்கள்.. எங்கே, எப்போது நடக்கிறது டி20 உலக கோப்பை 2022.. வெளியானது அட்டவணை
மெல்பர்ன்: 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த மைதானங்களில் நடைபெறும் என்பதற்கான விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
Recommended Video
சமீபத்தில் டி20 உலகக் கோப்பை 2021 அரபு எமிரேட்சில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி சாம்பியனாக உருவெடுத்தது. இது ஏழாவது போட்டித் தொடராகும்.
இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எட்டாவது எடிஷன் உலக கோப்பைக்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டு.. ஆம்.. அடுத்த ஆண்டே 8வது உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

அக்டோபர் 16ம் தேதி உலக கோப்பை துவக்கம்
டி20 உலகக் கோப்பை 2022, அக்டோபர் 16 முதல் தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் ஐசிசி இன்று அறிவித்துள்ளது. பைனல் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) வைத்து நடைபெறுகிறது.

7 நகரங்கள்
எட்டாவது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறவுள்ளது. அடிலெய்டு, பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியின் முதல் அரையிறுதி நவம்பர் 9 ஆம் தேதி சிட்னியிலும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டிலும் நடைபெறும்.

ஒத்தி வைப்பு
அதே நேரத்தில், போட்டியின் முழு அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும். டி20 உலகக் கோப்பை 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது, ஆனால் அது கொரோனா தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட்டது.

சூப்பர் 12 சுற்று
2022 டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றுக்கு எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற நான்கு அணிகளும் முதல் சுற்றுக்குப் பிறகு தகுதி பெறும். சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து தவிர, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

தகுதி சுற்று
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகியவை நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனும் மேலும் நான்கு அணிகளுடனும் தகுதிச் சுற்றில் மோதும். அதிலிருந்து சூப்பர்-12 சுற்றுக்கான அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். ஓமன் மற்றும் ஜிம்பாப்வேயில் இந்த தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூன் மாதம் நடைபெறும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications