இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை மூலம் 4 மாதத்தில் 24,473 முறை ஆபாச படம் பார்க்க முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் 4 மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள் பாலியல் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரித்து அறிக்கை அளிக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பான அறிக்கையில் பிரதமர் தெரசா மேயின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் மீதும் குற்றச்சாட்டு இடம் பெற்றிருந்தது. 2008-ம் ஆண்டு டேமியன் கிரீனின் அலுவலக கணிணியில் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

24,473 முறை முயற்சி

24,473 முறை முயற்சி

இதையடுத்து டேமியன் கிரீனை ராஜினாமா செய்ய தெரசா மே உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நாடாளுமன்ற வளாக வைஃபை இணைப்பு மூலம் 24,473 முறை ஆபாச படங்களை இணையதளங்களில் பார்க்க முயற்சி நடந்துள்ளதாக இங்கிலாந்து நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு நிமிடத்துக்கு 9 முறை

ஒரு நிமிடத்துக்கு 9 முறை

அதாவது ஒரு நாளைக்கு 169 முறை வைஃபை இணைப்பை பயன்படுத்தி ஆபாச படங்கள் பார்க்க முயற்சிக்கப்பட்டதாம். ஒரு நிமிடத்துக்கு 9 முறை இத்தகைய முயற்சி நடந்திருக்கிறதாம்.

இது மிக குறைவாம்

இது மிக குறைவாம்

ஆனால் இந்த அடங்கா முயற்சியை இடைவிடாதும் தடுத்தும் வந்துள்ளனர். அதுவும் இது கடந்த காலங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாம்.

2016-ல் குறைவு

2016-ல் குறைவு

2015-ம் ஆண்டு 2,13,020 முறை ஆபாச படங்களை பார்க்க முயற்சிக்கப்பட்டதாம். 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 1,13,208 என குறைந்து போனதாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
24,473 attempts to view porn webistes from the computers and other devices connected to the British Parliament's network.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற